சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் வழங்க நடவடிக்கை?
சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலின்போது, இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் வருடம் முதல் இந்த நடவடிக்கையை இராணுவத்தினரிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை வெளிநாட்டு நிறுவனமொன்றிடம் வழங்கியுள்ளதால் நாட்டுக்கு கிடைக்கவேண்டிய பணம் வெளிநாட்டுக்கு செல்கின்றது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மிகக்குறைந்த செலவில் வாகனசாரதி அனுமதிப்பத்திரத்தினை இராணுவத்தினால் தயாரிக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார் என்றும் இது தொடர்பாக இராணுவம் மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக போக்குவரத்து அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை