ஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு

வவுனியா நிருபர்
ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியாவின் கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் தமது ஆதரவாளர்களுடன் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டனர்.வவுனியா நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்விலேயே அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஜனக்க நந்தகுமார அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள சிங்கள மக்கள் வாழும் கிராமங்களின் அமைப்பாளர்களாகவும், அவர்களது வேட்பாளர்களாகவும் செயற்பட்டிருநத 6 பேர் தமது ஆதரவாளர்கள் 250 பேருடன் பொதுஜன பெரமுன வேட்பாளர் ஜனக்க நந்தகுமார அவர்களுடன் வெற்றிலை கொடுத்து இணைந்து கொண்டனர்.

அவர்களை வரவேற்ற வேட்பாளர் ஜனக்க நந்தகுமார அவர்களுக்கான அங்கத்துவத்தை வழங்கியிருந்ததுடன், அவர்களது பிரதேச தேவைகள் குறித்தும் கவனம் செலுத்துவதாக உறுதி வழங்கினார்.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

6 Attachments

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.