திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவு!
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 13ஆம், 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெற்ற தபால்மூல வாக்கு பதிவிடும் நடவடிக்கை உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களின் மேற்பார்வையின் கீழ் சுமூகமான முறையில் நடைபெற்றுள்ளது.
அத்துடன். இன்றும் நாளையும் முப்படை, பொலிஸ் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகத்தை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கான தபால்மூல வாக்கு பதிவு இடம்பெறவுள்ளன.
அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை