கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2007 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளைவிட்டு இன்று (வியாழக்கிழமை) வெளியேறியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 674 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2007 பேர் குணமடைந்துள்ள நிலையில், 556 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம் இந்த தொற்றுக்கு உள்ளான 11 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் 168 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை