போட்டியிட தைரியம் இல்லாதவர்களே தேர்தலினை ஒத்திவைக்குமாறு கோருகின்றனர் – சுசில் பிரேமஜயந்த
போட்டியிட தைரியம் இல்லாதவர்களே தேர்தலினை ஒத்திவைக்குமாறு கோருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொதுத்தேர்தலை தொடர்ந்தும் பிற்போட்டால் நாட்டில் அரசியலமைப்பு ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படும்.
கொவிட் -19 வைரஸ் பரவலை காரணம் காட்டி, ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை பிற்போடுமாறு எதிர்தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தலில் வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளார்கள். போட்டியிட தைரியம் இல்லாதவர்களே தேர்தலை பிற்போடுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று சமூக தொற்றாக பரவலடையவில்லை என்பதை சுகாதார தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போட்டால் நாட்டில் அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிகள் தோற்றம் பெறும்.
ஆகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் பொறுப்புடன் கருத்தரைக்க வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை