அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பு !
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பு ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கெண்ணும் மத்திய நிலையங்களில், புதிய சாதாரண வாழ்க்கை முறையின் கீழ், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கட்சிகளின் பிரதிநிதிகளை எவ்வாறு ஈடுபடுத்துவது என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
20 க்கு 20 பரப்பளவுடைய அறையொன்றில், கட்சியொன்றுக்கு 5 பிரதிநிதிகள் எனும் அடிப்படையில், 20 கட்சிகளின் 100 பிரதிநிதிகளையும் எவ்வாறு அனுமதிப்பது குறித்து ஆலோசனைகள் பெறப்படவுள்ளன.
அத்துடன், மேலும் பல விடயங்கள் குறித்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை