பொதுத்தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று வருகை
பொதுத்தேர்ததலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு வருகைத்தரவுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு வருகை தரவுள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனால், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பெரும்பாலும் வருகைத்தரமாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், முதலாவது அணி இன்று வருகை தரவுள்ளது. இதில் 4 பேர் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்தப்பின்னர், எதிர்வரும் முதலாம் திகதி முதல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை