மண்டைதீவில் 111 கிலோ கஞ்சா மீட்பு – இருவர் கைது
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பகுதியில் கஞ்சா போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 111 கிலோ கஞ்சா போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமாக சென்ற படகினை கடற்படையினர் மறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது அதில் சந்தேகத்துக்கிடமான முறையில் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாசையூர் மற்றும் நாவாந்துறை பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மீட்கப்பட்ட 111 கிலோ கஞ்சா ஆகியன போதைபொருள் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஊடாக கையளிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை