கொரோனா அச்சம் – 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

ஹோமாகம – நுகேகொட நான்காம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் பிரிவில் பெண் சார்ஜண்ட் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே பொலிஸார் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்பது பொலிஸ் அதிகாரிகளும், நான்கு சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் ஹபராதுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், 13 பொலிஸாரும் ஐந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் அத்திட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.