வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 100பேர் நாட்டை வந்தடைந்தனர்
வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 100 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விசேட விமாங்கள் ஊடாகவே இவர்கள், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நாடடை வந்தடைந்துள்ளனர்.
சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு சென்றவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அனைவரும் பீ.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை