யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு சுரேன் ராகவன் தீர்மானம்

யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டபீடத்தின் விரிவுரையாளர் சட்டத்தரணி, கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றில் முன்னிலையாவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அழுத்தத்தின் பேரில் கடந்த வருடத்தின் பிற்பகுதியில் பல்கலைக்கழக பேரவை தடை விதித்தமை காரணமாக, அவர் தன்னுடைய விரிவுரையாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவேண்டிய துரதிஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது.

கல்விமானாக நான் அவருக்கு என்னுடைய ஆதரவை தெரிவிப்பதோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளேன்.

உயர்கல்வி அமைச்சரை சந்தித்து எனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதுடன் கலாநிதி குருபரனுக்கு ஏற்பட்டுள்ள நிலை தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளேன்.

கல்விமானொருவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு குருவுயு போன்ற இயக்கம் மௌனமாக இருப்பதும் ஆரோக்கியமான விடயமல்ல என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கல்விமான்களின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.