கோண்டாவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை திறப்பு
கோண்டாவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நேற்று (வெள்ளிக்கிழமை) வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலத்தின் 55 மில்லியன் ரூபா செலவில் குறித்த புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஜெயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபையின் பிரதமர் செயலாளர் பத்திநாதன், வடமாகாண சபை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை