கந்தகாடு விவகாரம்: வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த முதலாவது ஆலோசகர் குணமடைந்தார்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட முதலாவது ஆலோசகர், பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
ஹபராதுவை- ஹினட்டிகல பகுதியைச் சேர்ந்த இவருக்கு பொரளை ஐ.டி.எச்.இல் சிகிச்சைப் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மேலும் இவருடன் தொடர்பினை பேணியிருந்த மனைவி உள்ளிட்ட 21 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.
குறித்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த மாதம் 22ஆம் திகதியும் இவர்கள் அனைவருக்கும் இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹபராதுவை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை