பிரபாகரன் துப்பாக்கியில் பெற முயற்சித்த நாட்டை பேனாவால் எழுதிக்கொடுக்க தயாரில்லை – மஹிந்த திட்டவட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்த நாட்டை பேனாவால் எழுதிக்கொடுக்க நாங்கள் தயார் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெல்லவாய பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டங்கள் சிறப்பாக, தெளிவாக, வலுவாக உள்ளதென இன்று ஐக்கிய தேசியக் கட்சியினரும் கூறுகின்றனர்.
அந்த அனைவரையும் இணைத்துக்கொண்டு மூன்றில் இரண்டு அதிகாரத்தை இந்த தேர்தலில் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
அரசியலமைப்பை மாற்ற, நாட்டிற்கு பொருத்தமான ஒற்றுமையை பாதுகாப்பதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு நாங்கள் ஆயத்தம்.
பிரபாகரன் துப்பாக்கியில் பெற முயற்சித்த நாட்டை பேனையில் வழங்க நாங்கள் தயாரில்லை. உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் கிட்டட்டும்’ என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை