5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 4 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கையான செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹள, வலல்லாவிட்ட மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு இவ்வாறு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கும் குறித்த செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை