கந்தகாடு: வைரஸ் தொற்றாளர்கள் அதிகரிப்பின் தற்போதைய நிலைமை
கந்தகாடு போதைப்பொருள் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை வரையான நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றாளர்கயாக 560 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 451 பேர் மறுவாழ்வு பெற்ற கைதிகள், 63 ஊழியர்கள், 5 வளவாளர்கள் மற்றும் 41 பேர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்களென அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 6 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை