குருநாகலில் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் – விசாரணைக் குழுவின் அறிக்கையை பிரதமரிடம் வழங்க நடவடிக்கை
வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய குறித்த அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி பிரதமரிடம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க தலைமையில் இந்த குழு தற்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
முதற்தடவையாக குருநாகலை இராசதானியாக்கிக் கொண்ட இரண்டாவது புவனேகபாகு மன்னர்இ பலகையால் உருவாக்கப்பட்ட மேடையில் தமது அரசவையை நடத்தியிருந்தார்.
குருநாகல் நகர மத்தியிலுள்ள இந்த அரசவையின் பாதுகாப்பிற்காக பின்னர் ஒரு கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. இந்த அரசவையும் அதன் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கட்டடமும் தொல்பொருள் சின்னங்களாக தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையில் இருந்தன.
சிறிது காலமாக குருநாகல் மாநகர சபை இந்த கட்டடத்திற்குள் ஹோட்டல் ஒன்றை நடத்திச் சென்றுள்ளது. இந்த நிலையில், குறித்த கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த 14ஆம் திகதி தகர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை