கொரோனாவை கட்டுப்படுத்தும் அதேவேளை நாடும் அபிவிருத்தி செய்யப்படுகின்றது – நாமல்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் அதேவேளையில், நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாமல் ராஜபக்ஷ, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மந்தமடைந்தது எனக் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தபோது, உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் நாடாக இருந்த இலங்கை பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறியது என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவேதான் கடந்த 5 ஆண்டுகால அழிவுக்குப் பின்னர் நாடு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று மக்கள் கருதுவதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அத்தோடு பொருளாதார ரீதியாக கடும் தாக்கத்தை நாடு எதிர்கொண்ட நேரத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றார் என்றும் மறுபுறம், கடந்த அரசாங்கத்தின் தோல்விகளால் பொதுமக்கள் கடனாளிகளாகவும் கடும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள போராடி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் அதே வேளையில், அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்யத் தொடங்கியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை