எனது கனவு ஆளும் கட்சி சார்பில் அமைச்சராக வரவேண்டும் என்பதே – சந்திரகுமார்
எனது கனவு ஆளும் கட்சி சார்பில் ஒரு அமைச்சர் வரவேண்டும் என்பதே என பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பட்டிருப்புத் தேர்தல் தொகுதியிலுள்ள மாங்காடு கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்
“சிலர் நாடாளுமன்றம் போனால் ஆங்கிலத்தில் கதைத்தால் எல்லாவற்றையும், பெற்றுவிடலாம் என நினைக்கின்றார்கள், அவ்வாறானவர்கள் யாரும், அவ்வாறு நாடாளுமன்றம் போய் கதைத்து வாதாடி எதையும் பெற்று வந்தது கிடையாது.
எமக்கு ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும், நமது கட்சிக்காரர்களாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் அவர்களிடம் நேரடியாக நாம் நினைத்ததைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.
இம்முறை எமது மொட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நான் தகுதி இல்லை என மக்கள் நினைத்தால் நீங்கள் மொட்டுக்கு மாத்திரம் வாக்களியுங்கள், எனது கனவு ஆளும் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தமிழ் அமைச்சர் வரவேண்டும் என்பதுதான்.
எதிர்வரும் 15 வருடங்களுக்கு எமது பொதுஜன பெரமுனக் கட்சியின், ஆட்சி இருக்கும். ஆகையால் இந்த ஆட்சியுடன் இணைந்து போனால் எமது மக்களுக்கு ஏராளமான அபிவிருத்தியை கொண்டு வரலாம்.” என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை