15 உள்நாட்டு நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து!

15 உள்நாட்டு நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறி கப்பல்களில் எரிந்த நிலையில் கழிவுகளாக எஞ்சியிருந்த எண்ணெய்யை கடலில் வீசிய குற்றச்சாட்டுக்கு அமையவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழலியல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடற்படை, பொலிஸ் சூழல் பிரிவு, கடலோரப் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நிறுவனங்கள் இனங்காணப்பட்டிருந்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.