இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு இன்று (வியாழக்கிழமை) காலை அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பியவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில் 2064 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
அதேநேரம் இந்த தொற்றுக்கு உள்ளான 677 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை