தேர்தல் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல்!
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவி தேரதல் ஆணையாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இதன்போது, தபால் மூல வாக்களிப்பு சதவீதம் தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு, தேவையேற்படின் தபால் மூல வாக்களிப்பிற்காக மேலும் ஒரு தினத்தை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச ஊழியர்கள் கட்டாயமாக தேர்தல் கடமைகளில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை