கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமையய இன்று (வியாழக்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எதுல் கோட்டை, புறக்கோட்டை, பத்தேகம, உடஹமுல்ல, கங்கொடவில, மாதிவெல, தலபத்பிடிய, நுகேகொடை, பாகொடை, நாவலை, மொரகஸ்முல்லை, ராஜகிரிய, கொழும்பு 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம், கொழும்பு 04, 06, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

2Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.