மன்னாரில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் மீது பொலிசார் தீவிர கண்காணிப்பு…
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் புதன் கிழமை (22.07.2020) அழைக்கப்பட்ட வழக்குகளில் சுமார் 15 வழக்குகள் மதுபோதையில் வாகனங்கள் செலுத்தியவர்களின் வழக்குகளாகவே காணப்பட்டன.
இதில் ஆறு வழக்குகள் அடம்பன் பொலிஸ் நிலையப் பிரிவைச் சார்ந்த வழக்குகளாகக் காணப்பட்டன. ஏனையவை மடு மற்றும் மன்னார் நகர் புறங்களில் உள்ள வழக்குகளாக இருந்தன.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஐh முன்னிலையில் நடைபெற்ற இவ் வழக்குகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய நபர் ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
மன்னார் நகரத்துக்கள் வேகமாக மோட்டர் சைக்கிள் செலுத்திய நபர் ஒருவருக்கு 5000 ரூபா அபராதமும், ஒருவர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதும் ஏனையவர்கள் மது போதையுடன் வாகங்களுக்கான காப்புறுதிகள், வாகன ஓட்டுனருக்கான அனுமதி பத்திரங்கள், வாகன வருமான அனுமதி பத்திரங்கள் இன்றி வாகனங்கள் செலுத்தியதாக வழக்கு தாக்குதல்கள் செய்யப்பட்டிருந்தன.
இதன்போது நீதவான் ஒவ்வொருவரையும் தலா ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் வழக்குகளை எதிர்வரும் 01.10.2020 வரை ஒத்திவைத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை