இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை உள்ளது என கூறும் ஒரே கட்சி கூட்டமைப்பு – இரா.சாணக்கியன்…
இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை உள்ளது என கூறும் ஒரே கட்சி தமிழ் தேசிய
கூட்டமைப்பு என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்
இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த
விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தற்போது கிழக்கில்
போட்டியிடும் அனைத்து கட்சிகளும் கிழக்கினை மீட்கப் போவதாக கூறுகின்றார்.
ஆனால் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு சமஉரிமை உள்ளது என கூறும் ஒரே
கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே ஆகும். வேறு எந்த கட்சிகளும்
தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்ற அந்த விடயத்தினை கூறுவது கிடையாது.
நான் தற்போது வசிக்கின்ற வீட்டிற்கு பல்வேறு கட்சிகளின் தேர்தல்
விஞ்ஞாபனங்கள் வந்துள்ளன. அவற்றில் எந்தவொரு விஞ்ஞாபனத்திலும் இந்த நாடு
தமிழனுக்கும் சொந்தமானது என சொல்லப்படவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை