சில்லறைகளில் ஒன்றே சுமந்திரன்; அவருடன் விவாதிக்கத் தயாரில்லை – கஜேந்திரகுமார் சாட்டையடி…
“கொள்கை சார்ந்த ஆரோக்கியமான விவாதமொன்றை முன்னெடுப்பதற்குத் தயாராக இருக்கின்றேன். அதற்காக சுமந்திரன் உள்ளிட்ட சில்லறைகளுடன் விவாதத்தில் ஈடுபட முடியாது.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோர் பொதுவெளியில் விவாதிப்பதற்கு முன்வருவார்களாயின் தாயகத்தின் எந்தப் பகுதியிலும் அதனை நடத்தினாலும் பங்குகொள்வதற்குத் தயாராக இருக்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:_
“தமிழ் தேசியக் கொள்கை சார்ந்து விவாதம் ஒன்றுக்கு நான் எப்போதுமே தயாராக இருக்கின்றேன் என்னுடன் விவாதம் செய்பவர்கள் பொறுப்புக்கூற வல்லவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் நிலைப்பாடுகளுக்கும் கட்சியின் நிலைப்பாடுகளுக்கும் மாறுபட்ட நிலைமை இருக்கக்கூடாது.
அவ்வாறு இரண்டு வேறுபட்ட தரப்பினருடன் பொதுவெளியில் விவாதம் நடத்துவது பொருத்தமற்றது சுருங்கக்கூறின் சில்லறைகளுடன் விவாதிப்பதில் எவ்விதமான பயனுமில்லை.
சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்தாலும் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றே தெரிவித்து வருகின்றனர்” – என்றார்
கருத்துக்களேதுமில்லை