புதிய அரசமைப்பு சர்வாதிகார ஆட்சிக்கே அதுவே கோட்டாவின் நிலைப்பாடு – மாவை

சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இராணுவக்கட்டமைப்பை பலப்படுத்தி, புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்கவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருகிறார் என இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த பிரசாரக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளதாவது “ஜனநாயக வழிகளில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு  அவர் விதைத்திருக்கின்ற கொள்கை பிரகடனமானது  ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் காணப்படுகின்றது.

நாட்டில் இனப்பிரச்சினையொன்று இருக்கின்றது என்ற எண்ணமே ஜனாதிபதியிடம் இல்லை.

மேலும் ஒரு ஜனநாயகத்தை மீள கட்டியெழுப்புவதற்கு அவசியமான 19ஆவது திருத்தத் சட்டத்தை  நீக்க வேண்டுமென அவர் கூறுவதின் ஊடாக சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முனைவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில் 70 வருட போராட்டம் அல்லது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட, நடவடிக்கைகளுக்கு என்ன நடக்கப்போகின்றது என்பது தெரியவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.