கூட்டமைப்பின் வதிரி பிரசாரக் கூட்டம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் நடைபெற்றது.
குறித்த கூட்டமானது மாலை 6.30 மணிக்கு உடுப்பிட்டி தொகுதி தமிழரசுக் கட்சி தலைவர் கு.சுரேந்திரன் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது
இப் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்நாள் வேட்பாளர்களுமான, மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், ஆபிரகாம் சுமந்திரன், ஆகியோரும் பிரதேச சபையின் தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை