யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்- மஹிந்த
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்தப்பில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது, “முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு எமது அரசாங்கத்தினால் முடிந்தது.
ஆனாலும் அதனை அன்று, தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராக சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்களை காப்பாற்றியுள்ளோம்.
அதாவது ஆறிற்கும் நான்கிற்கும் வித்தியாசம் தெரியாத பிள்ளைகளின் கைகளுக்கு ஆயுதங்களை வழங்கி, கழுத்தில் சைனட் குப்பியை தொங்கவிட்ட யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம்.
இதனால் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கு முடியுமானதாக மாறியுள்ளது.
இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்தினரை பாதுகாப்பதற்கு பதிலாக அரச சார்பற்ற நிறுவனங்களையே பாதுகாத்தது” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை