தெருவால் போகின்றவர்களின் கருத்தை முஸ்லிம்களின் கருத்தாக கருணா தூக்கிப்பிடிப்பது ஏன்…

தெருவால் போகின்றவர்களின் கருத்தை முஸ்லிம்களின் கருத்தாக கருணா தூக்கிப்பிடிப்பது ஏன் ?
இராமன் நபியென்றும், இராவணன் முஸ்லிமென்றும் கூறியதன் மூலம் கருணா அம்மானுக்கு அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கான களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்தினை கூறிய முஸ்லிம் பெயர்தாங்கியை ஒருபோதும் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொண்டதுமில்லை, அவருக்கு வாக்குகள் வழங்கியதுமில்லை.
இவரின் கருத்தை முஸ்லிம்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த கருத்தை சிலோன் தௌஹீத் ஜாமஅத்தினர் வன்மையாக கண்டித்துள்ளதுடன் அதனை மறுத்துள்ளனர்.
பலயீனமான ஹதீஸ்களே நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், இராமன் நபியென்பதும், இராவணன் முஸ்லிமென்பதும் இஸ்லாத்தின் அடிப்படையில் எந்தவித ஆதாரமும் இல்லாத கருத்து என்று அவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.
ஆனாலும் கருணா இதனை விடுவதாக இல்லை. தெருவால போகின்ற அரசியல்வாதிகளின் கருத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு முழு முஸ்லிம்களையும் விமர்சிக்கின்றார்.
இதன்மூலம் முஸ்லிம் பெயர்தாங்கிய நபருக்கு பணத்தை கொடுத்து இவ்வாறு பேசுமாறு கருணா ஆலோசனை வளங்கியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில் அரசியலில் எதுவும் நடக்கலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.