பாராளுமன்றத்தில் தூங்கும் உறுப்பினர்கள் இல்லாமல் கூரிய வாள்களாக இருக்கின்ற வேட்பாளர்களை தெரிவு செய்வோம்…

அமையப் போகின்ற பாராளுமன்றம் தூங்குகின்ற இடமில்லாமல் கருத்தியலால் முட்டி மோதுகின்ற யுத்த களமாக இருக்கப் போகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் திகாமடுல்ல வேட்பாளர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
நேற்று (31) அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் முடிந்த கையோடு தூங்குவோம் என்று நினைத்து தூங்குகின்ற எந்த அரசியல் கட்சி உறுப்பினராக இருந்தாலும் இம்முறை அமையப் போகின்ற பாராளுமன்றத்தில் தூங்கிவிட முடியாது. அவ்வாறு தூங்குபவர்களாக இருப்போர்களானால் அவர்களைப் போன்ற துரோகிகள் யாரும் இருக்க முடியாது.
அவர்களைப் போன்ற உறுப்பினர்களை உங்களுடைய தெரிவுகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். எம் சமூகத்தையும், எமது உரிமைகளையும் விட்டுக்கொடுக்காமல் அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றவர்களை தெரிவு செய்பவர்களாக உங்களின் தெரிவு இருக்க வேண்டும்.
ஆகவே, அமையப் போகின்ற கருத்தியல் யுத்தக் கள பாராளுமன்றத்தில் எமது முஸ்லிம் இனம் தொடர்பாக கூரிய வாள்களாக இருக்கின்ற வேட்பாளர்களை தெரிவு செய்து அவர்களை பாராளுமன்றம் அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.