திருகோணமலை மாவட்டத்தில் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று (04) காலை 8.00 தொடக்கம் தி- விபுலானந்தர் கல்லூரியிலிருந்து சுகாதார நடை முறைகளை பின் பற்றிவாறு அனுப்பி வைக்கப்பட்து… ட

திருகோணமலை மாவட்டத்தில் 2019ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி இத்தேர்தலில் மொத்தமாக இரண்டு இலட்சத்து 88 ஆயிரத்தி  868 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இதில் சேருவல தேர்தல் தொகுதியில் 80912 வாக்காளர்களும் திருகோணமலை தொகுதியில் 97065 வாக்காளர்களும் மூதூர் தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து பத்தாயிரத்தி 891 வாக்காளர்களும் அடங்குவர். இவற்றுள் இம்மாவட்டத்தில் தபால் மூல வாக்காளர்கள் 15200 பேர் குறிப்பிடத்தக்கது.நடைபெற்ற தபால்மூல வாக்குப்பதிவில் 14907 வாக்காளர்கள் தம் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.இது 98 சதவீத வாக்களிப்பை பிரதிபலிப்பதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான அசங்க அபேவர்த்தன தெரிவித்தார்.

மாவட்டத்தில் மொத்தமாக 307 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகள் திருகோணமலை விபுலானந்தாக் கல்லூரியில் நடைபெறவுள்ளதோடு 44 வாக்கெண்ணும்  நிலையங்களில் வாக்கொண்ணும்பணிகள் நடைபெறவுள்ளது.இவற்றுள் 09 நிலையங்கள் அஞ்சல் வாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படுவதோடு .கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 30 வாக்கெண்ணும் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.