மட்டக்களப்பில் வாக்களித்தார் சாணக்கியன்!..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்
இரா.சாணக்கியன் இன்று(புதன்கிழமை) வாக்களித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(புதன்கிழமை) காலை
7.00 மணிக்கு  ஆரம்பமாகிய நிலையில் சுமூகமான முறையில் நடைபெற்று
வருகின்றது.

இந்தநிலையில் இன்று காலை மட்டக்களப்பு பட்டிருப்பு மத்திய வித்தியாலயத்தில்
அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இரா.சாணக்கியன் வாக்களித்துள்ளார்.

புதிய மாற்றத்திற்காக நான் வாக்களித்துவிட்டேன் நீங்களும் உங்களது ஜனநாயக
கடமையினை நிறைவேற்றுங்கள் என வாக்களிப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து
வெளியிடும் போது குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.