கல்குடாத் தொகுதியில் வாக்களித்த அரசியல் பிரமுகர்கள்…
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 இற்கான வாக்களிப்புகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நான்கு இலட்சத்தி ஒன்பதாயிரத்தி 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்;றுள்ளனர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஒட்டமாவடி தேசிய பாடசாலையிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்திலும், முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் கிரான் மத்திய வித்தியாலயத்திலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சட்டத்தரணி ந.கமலதாசன் பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்திலும் உள்ள வாக்குச் சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
அத்தோடு வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணி வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதைக் காணக் கூடியதாக உள்ளது. வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதார வழிமுறை முழுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது.
கருத்துக்களேதுமில்லை