விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரி மறைவுக்கு வைகோ ஆழ்ந்த இரங்கல்…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின்
மூத்த சகோதரி மறைவுக்கு வைகோ ஆழ்ந்த இரங்கல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரான தொல்.திருமாவளவன் அவர்களின்
மூத்த சகோதரி திருமதி பானுமதி அம்மையார் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு,
மறைந்தார்கள் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத அதிர்ச்சி அடைந்தேன்.
தன் சகோதரி மீது எல்லையற்ற அன்பும் பாசமும் வைத்திருந்தார். அவர் சென்னையில்
தங்கியிருக்கின்ற நாட்களில், அவருக்கு உணவு அனுப்புவதிலிருந்து அவரை தாயைப் போலவே
பாசம் காட்டி ஊக்குவித்தவர் பானுமதி அம்மையார்.
தலையில் இடி விழுந்ததைப் போல் இந்தச் சோக மரணம் தொல்.திருமா அவர்களின் உள்ளத்தைச்
சுக்குநூறாக்கிவிட்டது. ஆறுதலும், தேறுதலும் சொல்ல வார்த்தைகள் இல்லை.
அவருடைய கண்ணீரில் நானும் பங்கேற்கிறேன். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துக்களேதுமில்லை