நுவரெலியா மாவட்டம் 75 வீத வாக்குபதிவு…
(க.கிஷாந்தன்)
இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்களில், வாக்களிப்பு இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை நிலவினாலும், மக்கள் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியதைக் காணக்கூடியதாக இருந்தது.
இடையிடையே மழை பெய்ததால் குடைகளை பிடித்துக்கொண்டு, வரிசையில் காத்திருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தமது வாக்குரிமையை நுவரெலியா மாவட்ட மக்கள் பயன்படுத்தினர்.
நுவரெலியா, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கத்த ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளிலும் 65 வீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் சராசரியாக 75வீத வாக்குபதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
வாக்களிப்பு முடிவடைந்த பின்னர், வாக்கு பெட்டிகள் பாதுகாப்பான முறையில் சீல் வைக்கப்பட்டு, பொலிஸாரின் பாதுகாப்புடன் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. நாளை காலை 7 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை