மீரா மிதுன் விவகாரம் : ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்
நடிகை மீரா மிதுன் தொடர்ந்து நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரை பற்றியும், அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினர் பற்றியும் எல்லை மீறி விமர்சித்து வந்தார். இதற்கு அவரது ரசிகர்களும் அவரது பாணியில் எதிர்வினையாற்றினர். திரையுலகினர் பலரும் அமைதி காத்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா கண்டித்ததார். அதோடு சமூகவலைதளங்களில் ரசிகர்களை வரம்பு மீறி பேசுவதையும் கண்டிக்க வேண்டும் என உச்ச நட்சத்திரங்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரை வாய் திறக்காமல் இருந்த சூர்யா டுவிட்டரில் கூறியிருப்பதாவது : ”எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் பாரதிராஜாவுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் 2018ல் தான் பதிவிட்ட, ”தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற அன்பான பேன்ஸ்” என்ற டுவீட்டை மீண்டும் மேற்கோள் காட்டி இதை பதிவிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை