தமிழர் பகுதியில் மீண்டும் துரித அபிவிருத்தித் திட்டம் – பிரதமர் மஹிந்த வாக்குறுதி

“தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“எனது முந்தைய ஆட்சியின்போது வடபகுதியில் கடுமையான சூழ்நிலைகளின் கீழ் பெருமளவு விடயங்களை செய்தேன்.

துரதிஷ்டவசமாக கடந்த சில வருடங்களாக குழப்பப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் முன்னெடுக்கவுள்ளோம்; துரிதப்படுத்தவுள்ளோம்.

இனம், கலாசாரப் பின்னணிகளைக் கடந்து எங்கள் அரசு அனைத்துப் பிரஜைகளினதும் தேவைகளைபி பூர்த்தி செய்யும்.

வாழ்வாதாரம், விவசாயத்துக்கான நீர்ப்பாசனம், ஏற்றுமதிகளை தரமுயர்த்துதல், கல்வி மற்றும் மருத்துவமனைகளின் வசதிகள் தொடர்பில் அவசர முன்னுரிமைகள் உள்ளன” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பது குறித்து அவர் அந்தப் பேட்டியில் எதனையும் குறிப்பிடவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.