காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்!
ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஸ்னகவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
ரஸ்னகவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை