மண்ணகழ்வினை பாதுகாக்க இராணுவத்தினரின் உதவி நாடப்படவுள்ளது
மண்ணகழ்வினை பாதுகாக்க இராணுவத்தினரின் உதவி நாடப்படவுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ப்பட்டுவரும் சட்டவிரோத மண்ணகழ்வினை தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளீர்கள் என ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இரணைமடு குளத்தின் கீழ் மெற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண்ணகழ்வினால் எதிர்காலத்தில் இடர் ஏற்படும் அபாயம் காணப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்களினால் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, இதன்போது அவர் இவ்விடயத்தினை குறிப்பிட்டார்.
சட்டவிரோத மண்ணகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. கண்டாவளை பிரதேசத்தில் பிரதேச செயலாளரின் நேரடி நடவடிக்கைகளினால் இயலுமானவரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவு்ம, இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் சந்திப்புக்களில் பேச்சுக்கள் இடம்பெற உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் கே.சிறிமோகன், மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் எஸ்.கோகுலராஜா, மாவட்ட செயலக ஊடக ஒருங்கிபை்பாளர் எஸ்பிரேமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை