தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய விநாயகர் சதுர்த்தி விரதமும் திருவிழாவும்…
உலகளாவிய ரீதியில் இந்துக்கள் ஆவணி மாத விநாயகர் விநாயகர் சதுர்த்தி விரதத்தினை எதிர்வரும் சனிக்கிழமை (22.08.2020) அன்று அனுட்டிக்கவுள்ளனர். அந்த வகையில் இலங்கையின் மிக உயரமான சுதைவிக்கிர விநாயகரை இராஜகோபுரமாக கொண்ட மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையர் போராலயத்தில் விநாயகர் சதுர்த்தி விரதத்தன்று காலை பத்து மணியளவில் ஆலயத்தில் மஹா கணபதி ஹோமம் வெகுசிறப்பாக இடம் பெறும்.
இதன் போது விரதம் அனுட்டிக்கும் அடியார்களுக்கு விரதத்துக்கான சங்கர்ப்பம் இடம் பெறும். அன்றைய தினம் இரவு ஆலயத்தில் வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி வெளிவீதி மற்றும் முத்து சப்பரத்தில் ஊர்வலம் வருகையும் இடம் பெறுவதுடன் மறுநாள்(23.08.2020) காலை ஆறு மணியளவில் இந்து சமுத்திரதத்தில் தீர்தத உற்சபமும் இடம் பெறுவதுடன் களிமண்ணிகால் செய்யப்பட்டடு பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலை இதன் போது கரைக்கப்படவுள்ளது.
ஆதனை தொடர்ந்து விரம் அனுட்டித்த அடியார்களுக்கு விரத பாராயணம் செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை