10 சட்டங்கள் தொடர்பான 77 வர்த்தமானி அறிவிப்புகள் நாடாளுமன்ற அனுமதிக்கு!
வெவ்வேறு சட்டங்கள் தொடர்பான ஒழுங்கு விதிகளுக்கமைய, வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புகளை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நிதி அமைச்சர் எனும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வெவ்வேறு 10 சட்டங்கள் தொடர்பிலான விதிகளின் கீழ் வெளியிடப்பட்ட 77 வர்த்தமானி அறிவிப்புகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பான பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
* 2011ஆம் ஆண்டு இலக்கம் 18 இன் கீழான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 05 வர்த்தமானி அறிவிப்புகள்.
* 1989ஆம் ஆண்டு இல 13 கீழான உற்பத்தி வரி (விசேட ஒழுங்கு விதிகள்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 09 வர்த்தமானி அறிவிப்புகள்.
* கலால் வரி கட்டளைச் சட்டத்தின் கீழ் (52 ஆவது அதிகாரம்) கீழ் வெளியிடப்பட்டுள்ள 10 வர்த்தமானி அறிவிப்புக்கள்.
* 2006 ஆம் ஆண்டு இல. 11 நிதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 01 வர்த்தமானி அறிவிப்பு.
* 2012 ஆம் ஆண்டு இல. 12 கீழான நிதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒரு வர்த்தமானி அறிவிப்பு.
* 2018 ஆம் ஆண்டு இல. 35 நிதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 01 வர்த்தமானி அறிவிப்பு.
* 1962 ஆம் ஆண்டு இல. 19 வருமான பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 06 வர்த்தமானி அறிவிப்புக்கள்.
* சுங்க கட்டளைச் சட்டம் (235ஆவது அதிகாரம்) கீழ் வெளியிடப்பட்டுள்ள 03 வர்த்தமானி அறிவிப்புக்கள்.
* 2007 ஆம் ஆண்டு இலக்கம் 48 கீழான விசேட வர்த்தக பொருட்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 31 வர்த்தமானி அறிவிப்புக்கள்.
* 2017ஆம் ஆண்டு இல 12 இன் கீழான வெளிநாட்டு நாணய சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 05 வர்த்தமானி அறிவிப்புக்கள்.
கருத்துக்களேதுமில்லை