விஜய் தணிகாசலம், மாநிலசட்டமன்ற உறுப்பினர் ஸ்காபரோ றூஜ் பார்க்

அமைச்சர் ஸ்டீபன் லெச்சே அவர்கள் இன்று ஸ்காபரோ சுகாதாரக் கட்டமைப்பின் சுகாதார நிபுணர்களுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் விஜய் தானிகசலம், அமைச்சர் ரேமண்ட் சோ, சட்டமன்ற உறுப்பினர்களாகிய கிறிஸ்டினா மிடாஸ், அரிஸ் பாபிகியன் ஆகியோரை சந்தித்து, மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், பாடாசாலை ஊழியர்களுக்கும் நோய்த்தொற்றுப் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பான முறையில் பள்ளிகளைத் திறப்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் என்பது பற்றி விவாதித்தனர்.

எமது அரசாங்கம் பள்ளிகளில் கொவிட்-19 மேலாண்மைக்கான செயற்பாட்டு வழிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வழிமுறையானது ஒன்ராறியோவின் சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி உட்பட பொது சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் கொவிட்-19 தொற்றுகளை அடையாளங்கண்டு, தொற்றுக்குள்ளானவர்களைத் தனிமைப்படுத்தவும், பாடசாலைகளில் நோய்த்தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் உதவியாக அமையும்.

கனடிய நடுவண் அரச தனது அறிவிப்பினூடாக ஒன்ராறியோவிற்கு 381 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. இந்நிதியானது ஒன்ராறியோ மானில அரசினால் மீளவும் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு ஆதரவான திட்டங்களுக்காக வழங்கப்பட்ட 900 மில்லியன் டொலர்களைவிட மேலதிக உதவித் தொகையாக அமையும்.

இந்நிதி மானில அரசால் மேற்கொள்ளப்படும் பின்வரும் பல முக்கிய முயற்சிகளுக்கு உதவியாக விளங்கும்:

· பள்ளிகளை மீளத் திறக்கும்போது கூடுதல் பாதுகாவலர்களை பணியமர்த்தல், பள்ளிகளில் உள்ளக தட்பவெப்ப நிலை மற்றும் வளி மறுசுழற்சி போன்றவற்றுக்கான செலவுகள், மாணவர்களுக்கான இணைய சேவை, நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு வேண்டிய தனிநபர் பாதுகாப்பு கருவிகள், மேலதிக தேவைக்கேற்ப கல்வியாளர்களை தற்காலிகமாக பணியமர்த்தல் உள்ளிட்ட எமது திட்டத்தை நிறைவுசெய்வதற்காக 200 மில்லியன் டொலர்களும்,

· அதிகப்படியான வாகன ஓட்டுனர்களை வைத்திருக்கவும், பாடசாலை பேருந்து பாதைகள், பேருந்தில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்றவற்றுக்கு உதவியாக 70 மில்லியன் டொலர்களும்,

· மாணவர்களுக்கு உளநல ஆதரவினை வழங்குவதற்கு சிறப்பு கல்வி மற்றும் உளநலத்துறையில் தேர்ச்சிபெற்ற ஊழியர்களை பள்ளி நிர்வாகம் பணிக்கமர்த்தவும், பயிற்சியளிக்கவும் உதவும்பொருட்டு 12 மில்லியன் டொலர்களும்,

· கொவிட்-19 நோய்த்தொற்றினைக் கையாள்வதற்கென பள்ளிகளுக்கு உதவுவதற்காக மாகாணத்தில் உள்ள பொது சுகாதார பிரிவுகளில் கூடுதலாக 125 பராமரிப்பாளர்கள் பதவிகளை உருவாக்குவதற்கு 12 மில்லியன் டொலர்களும்,

· இணையவழிக் கற்றலை கற்றலை வழங்கும் அனைத்து நிலைகளிலுமுள்ள ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் அவற்றுக்கான இணையவழி கற்றலுக்கான ஆதரவை வழங்குவதை உறுதிப்படுத்த 36 மில்லியன் டொலர்களும் வழங்கப்படும்.

அத்துடன் எதிர்வரும் இலையுதிர்கால சூழலுக்கு ஒன்ராறியோ தயாராகுவதை உறுதி செய்வதற்கென தொற்றுநோய் தொடர்பான கல்வியூட்டல் தேவைகளுக்காக 50 மில்லியன் டொலர்களையும் எமது அரசு ஒதுக்குகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.