சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!!
அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டார் தினத்தினை முன்னிட்டு லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது லண்டன் நகரில் அமைந்துள்ள என்ற இடத்தில் இன்று (30.08.2020)
மதியம் 1.30 தொடக்கம் மாலை 3.00 மணிவரை இடம்பெற்றது
நாடு கடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் காணாமல் போனவர்கள் எங்கே ?? அவர்கள் தொடர்பான பதில்களை வழங்கு ??ஐநாவே ஏன் இந்த அமைதி?? பிரிட்டன் அரசே இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடு ??என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கிபோராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் காலநிலை இடையூறு விளைவித்ததையும் பொருட்படுத்தாது உணர்வு பூர்வமான கோஷங்களை எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை