கடைசி T20 கிரிக்கெட்டில் : இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!!!

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த முழுமுயற்சி மேற்கொள்ளும்.
அதேநேரத்தில் இந்த போட்டி தொடரில் ஆறுதல் வெற்றியை சுவைக்க பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.