இஸ்ரேல், நேபாளத்தில் சிக்கியிருந்த 229 பேர் இலங்கை திரும்பினர்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் நேபாளம், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் குழுவொன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்றிருந்த 203 பேரை ஏற்றிய ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விமானம் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இதேவேளை, நேபாளத்தில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள், காத்மண்டு நகரிலிருந்து நேற்றுப் பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும் விமான நிலையத்தில் பி.சிஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
…………
ReplyForward
|
கருத்துக்களேதுமில்லை