பெருகும் கொரோனா: மலேசியாவுக்குள் நுழைய இந்தியர்ளுக்கு தடை !!!

மலேசியாவில் கொரோனாவை பரவலைத் தடுக்கும் விதமாக, முன்னதாக செப்டம்பர் 7ம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழைய  இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

தற்போது இத்தடைப்பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின், இத்தாலி, சவுதி அரேபியா, ரஷ்யா, வங்கதேசம்  உள்ளிட்ட நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 

மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெற்றவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து விசாக்களில் உள்ளவர்களுக்கும் இத்தடை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், கொரோனாவால் 150,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளையும் இத்தடை பட்டியலில் இணைக்கப்படும் எனக் கூறியுள்ளார் மலேசியாவின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்திருக்கிறார். 

இன்றைய, இந்தியாவில் சுமார் 39 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகின்றது. 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.