அறநெறி ,இந்துமன்ற குருக்களுக்கு தலைமைத்துவ பயிற்சி!!
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம்,கந்தளாய் மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் ஆலய நிர்வாக அங்கத்தவர்கள்,அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்,இந்து மன்ற நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஆலய குருமார்களுக்கான தலைமைத்துவ பயிற்சி இன்று (05)தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகெளரி சிறீபதி தலைமையில் நடைபெற்றது.
ஒழுக்க நேயமிக்க சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கமைய பல்துறைசார் விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் கலந்து கொண்டதுடன் சமய ஒழுக்க விழுமியங்கள்சார் பல விடயங்களை எடுத்துரைத்தார்.
கருத்துக்களேதுமில்லை