இன்றைய ராசிபலன் (07/09/2020)
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சோர்வு களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்சினைகள் வந்து செல்லும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டியநாள்.
மிதுனம்
மிதுனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். மரியாதை கூடும் நாள்.
கடகம்
கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியால் வெற்றி பெறும் நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இழுபறியாக இருந்த வேலைகள் எளிதாக முடியும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தேவைகள் பூர்த்தி ஆகும் நாள்.
கன்னி
கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கவலைப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய நாள்.
துலாம்
துலாம்: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வீட்டிற்கு தேவையான சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு மனை வாங்குவது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.
தனுசு
தனுசு: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
மகரம்
மகரம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன் புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சகஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
கும்பம்
கும்பம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களை சரியாக பயன்படுத்தி கொள்வீர்கள். அரசு காரியங்கள் வெற்றியடையும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.
மீனம்
மீனம்: சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தாரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்துக்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாற்றங்கள் ஏற்படும் நாள்.
கருத்துக்களேதுமில்லை