அமெரிக்க ஓபன் டென்னிஸ்- செரீனா, டொமினிக் கால்இறுதிக்கு தகுதி!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

23 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றவரும், 3-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ‌ஷகாரியை எதிர்கொண்டார்.

இதில் செரீனா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் டை பிரேக்கருக்கு சென்றது. இதில் ‌ஷகாரி 8-6 என்ற கணக்கில் வென்றார்.

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் செரீனா ஆக்ரோசமாக ஆடினார். இதனால் அவர் 6-3 என்ற கணக்கில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர்: 6-3, 6-7 (6-8), 6-3.

மற்றொரு ஆட்டத்தில் பல்கேரியாவை சேர்ந்த பிரோன்கோவா 6-4, 6-7 (5-7), 6-3 என்ற கணக்கில் அலிசியா கோர்னெட்டை (பிரான்ஸ்) தோற்கடித்தார்.

2-வது வரிசையில் உள்ள சோபியா கெனின் (அமெரிக்கா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 16-ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) 6-3,6-3 என்ற நேர் செட் கணக்கில் சோபியாவை வீழ்த்தினார்.

இன்னொரு ஆட்டத்தில் அசரென்கா (பெலாரஸ்) 5-7, 6-1, 6-4 என்ற கணக்கில் கரோலினாவை (செக் குடியரசு) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) 7-6 (7-4), 6-1, 6- 1 என்ற கணக்கில் பெலிக்சை (கனடா) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

3-வது வரிசையில் உள்ள மெட்வதேவ் ( ரஷியா ) 6-4, 6-1, 6-0 என்ற கணக்கில் பிரான்செசை (அமெரிக்கா) தோற்கடித்தார்.

இன்னொரு ஆட்டத்தில் 6-வது வரிசையில் உள்ள மெட்டோ பெரானட்டி (இத்தாலி) அதிர்ச்சிகரமாக தோற்றார். 10-வது இடத்தில் உள்ள ஆந்த்ரே ருப்லேவ் (ஜெர்மனி) 4-6, 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

இதேபோல 21-வது வரிசையில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் மினாவுரும் 4-ம் சுற்றில் வெற்றி பெற்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.